தொடரும் பார்லி., கூட்டத்தொடர் பிரதமருக்கு சிவசேனா கேள்வி

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
 தொடரும் பார்லி., கூட்டத்தொடர் பிரதமர் சிவசேனா கேள்வி


மும்பை : 'தனிமையை கடைப்பிடிக்க, மக்களை அறிவுறுத்தும் பிரதமர், பார்லிமென்ட் கூட்டத் தொடர் தொடர்ந்து நடக்க அனுமதித்துள்ளது ஏன்' என, சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.


வலியுறுத்தல்




latest tamil news



'கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மக்கள் தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்' என, பிரதமர், மோடி வலியுறுத்தியுள்ளார். நாளை, காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டிலிருந்து வெளியே வராமல், சுய ஊரடங்கை கடைப்பிடிக்கவும், அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.இந்நிலையில், சிவசேனாவின் கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வில், எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டு
உள்ளதாவது:கொரோனா பரவலை தடுக்க, மக்கள் தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என, பிரதமர், மோடி வலியுறுத்தி வருகிறார். அதே நேரத்தில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடக்க அனுமதியளித்துள்ளார். இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
கூட்டத்தொடரில் பங்கேற்க, எம்..பி.,க்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என, 1,000க்கும் அதிகமானோர் வருகின்றனர்.

சந்தேகம்

அரசு மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்கள், வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், பார்லி., கூட்டத்தொடர் மட்டும், தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதில், அவர் பிடிவாதமாக உள்ளார். மத்திய பிரதேச அரசை கலைப்பதற்காகவே, பார்லி., தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
பார்லி., செயல்படாவிட்டால், 'கொரோனா பரவலால், சட்டசபையைக் கூட்ட முடியாது' என, மத்திய பிரதேச முதல்வர், கமல்நாத் கூற வாய்ப்பு உள்ளது. அதை தடுக்கவே, பார்லி., தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை, சிவசேனா ஆதரித்து வருகிறது. மும்பையை முற்றிலும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை, முதல்வர், உத்தவ் தாக்கரே எடுத்து வருகிறார். மக்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவதை நிறுத்தினாலே போதும், கொரோனா பரவலை, 50 சதவீதம் தடுத்துவிடலாம். இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
21-மார்-202021:28:25 IST Report Abuse
Siva லூசுபயல்... சந்தர்ப்பவாதி.. முதல்வர் தூங்கி விட்டால் பணி செய்யும் மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் தூய்மை செய்பவர்கள் என்ன இளிச்சவாயன்களா.... சேவை துறையில் இருக்கும் பணியாளர்களை மதிக்க கற்று கொள்ள சிவன் அருள் புரிய வேண்டும்...
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
21-மார்-202021:17:51 IST Report Abuse
Krishna Good Question
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
21-மார்-202015:07:54 IST Report Abuse
 Muruga Vel எல்லோருக்கும் கோரோனோ வரட்டுமே … நேற்று உத்தவ் தாக்ரே சோஷியல் டிஸ்டன்சிங் பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த போது அப்படி ஒரு நெரிசலான கும்பல் ...வைரலாக வாட்சப்பில் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X