பொது செய்தி

தமிழ்நாடு

வேலுடையான்பட்டு கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகோள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

நெய்வேலி: நெய்வேலி, வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா நோயை தடுக்கும் பொருட்டு நெய்வேலி, வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறிப்பாக, வரும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு அதிகளவில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், முக்கிய நிகழ்வுகளான தெருவடைத்தான், திருக்கல்யாணம், தேர், காவடி, பால்குடம் எடுப்பது, தெப்பம், கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறாது.கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், அன்னதானத்திற்கு அனுமதி கிடையாது. பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் பெற்றோர் வருவதை தவிர்க்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.கோவிலுக்குள் நுழையும் முன் கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி பயன்படுத்தி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். இத்தகவலை அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X