பொது செய்தி

தமிழ்நாடு

மசூதிகளில் தொழுகை நேரம் குறைப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் கொரோனா வைரஸ் எதிரொலியாக முஸ்லீம்கள் தொழுகை நேரத்தை குறைத்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவில்கள் மசூதிகள் சர்ச்சுகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதையேற்று நெல்லிக்குப்பத்தில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களில் தொழுகை நேரத்தை குறைத்தனர்.வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் மதியம் முதலில் தொழுகையும் அடுத்தது, பயான் எனும் அறிவுரையும் நடக்கும்.இந்த நிகழ்ச்சிகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு மேல் நடக்கும். கொரோனா பரவுவதை தடுக்க அனைத்து ஜமாத்தார்கள் இணைந்து மார்ச் 31 வரை தொழுகை மட்டுமே நடக்கும். அதுவும் 15 நிமிடத்தில் முடித்து கொள்ள வேண்டுமென கூறியுள்ளனர். அதன்படி நேற்று 15 நிமிடம் மட்டுமே தொழுகை நடந்தது. அதிலும் வழக்கத்தை விட குறைவானவர்களே தொழுகையில் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X