சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயான கொள்ளை உற்சவம் ரத்து

Added : மார் 21, 2020
Share
Advertisement

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காங்கேயன்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் திருத்தேர், மயானக்கொள்ளை உற்சவம் ஒத்தி வைப்பது என தாசில்தார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பண்ருட்டி அடுத்த மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 12 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் அபிஷேகம், ஆராதனைகள் நடந்து வந்தன. நாளை 22 ம்தேதி ஞாயிற்றுகிழமை திருத்தேர் உற்சவமும், நாளை மறுநாள் 23ம் தேதி மயானக்கொள்ளை திருவிழாவும்நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் உதயகுமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் சீனுவாசன், முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் குணசேகர்,வைத்தியலிங்கம்,செல்வராசு, தியாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொரானோ வைரஸ் காரணமாக திருத்தேர், மயானக்கொள்ளை உற்சவத்தை காலவரையின்றி ஒத்திவைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X