சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்ற இருவர் கைது..

Added : மார் 21, 2020
Share
Advertisement

புவனகிரி: புவனகிரி அருகே கூலி வேலை செய்வதாக கூறி வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் பணம், பைக்கை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.புவனகிரி அருகே அடையாளம் தெரியாத இருவர் வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்வதாக சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பின் நேற்று டி.எஸ்.பி.,கார்த்திகேயன், புவனகிரி இன்ஸ் பெக்டர் தேவி, சப்இன்ஸ் பெக்டர் டைமன்ட்துரை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி ஆதிவராகநல்லுாரியில் போலீசாரை கண்டதும் பைக்கில் அதிவேகமாக சென்றவரை போலீசார் துரத்திச்சென்று பிடித்தனர். மேலும் விசாரணை செய்ததில் ஆதிவராகநல்லுார் தைக்கால் பகுதியில் கூலி வேலை செய்வதாகக் கூறி வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் கிருஷ்ணகிரி பெங்களுர்சாலை மகாப்பூர் மகன் அப்கர்கான்(34), கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிர்பகுதியைச் சேர்ந்த சாருக் மகன் சல்மான்கான் (26) என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து அப்கர்கான், சல்மான்கான் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, ரூ 2 ஆயிரத்து 800 ரொக்கம் மற்றும் கஞ்சா விற்க பயன்படுத்திய டி.என்.24.யு., 4523 பதிவெண் கொண்ட பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X