பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறிகள் விலை திடீர் உயர்வு: மக்கள் குவிந்ததால் சந்தையில் கிராக்கி

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருப்பூர்:வரும் 22ம் தேதி சந்தை விடுமுறை என பரவிய வதந்தியால், நேற்று தென்னம்பாளையம் மார்க்கெட்டில் திடீரென கூட்டம் அதிகரித்தது. காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, வரும் 22ம் தேதி(நாளை), பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பூரில், நாளை உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட், தினசரி மார்க்கெட் செயல்படுமா என்ற கவலை மக்களுக்கு எழுந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை நடந்த தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு வழக்கத்தை விட அதிகளவில் வாடிக்கையாளர்கள் வந்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத வியாபாரிகள் திணறி போயினர்.வாடிக்கையாளர் எண்ணிக்கையை கவனித்து தங்களிடம் உள்ள காய்கறிகளின் விலையை திடீரென உயர்த்தினர். இதனால், இருதினங்களுக்கு முன் 30 ரூபாய் விற்ற பீர்க்கன், பாகல், அவரை கிலோ, 40 ரூபாயானது. நீண்ட நாட்களுக்கு பின் முள்ளங்கி, புடலை கிலோ, 16 ரூபாய்க்கு விற்றது. கேரட் விலை உச்சத்தை எட்டி கிலோ, 80 ரூபாய்க்கும், பீன்ஸ், 60 ரூபாய்க்கும் விற்பனையானது. மூன்று கிலோ, 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், நேற்று ஒரே நாளில் கிலோ, 55 ரூபாயானது. பெரிய வெங்காயம், 35 ரூபாய்க்கு விற்றது.
வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'கிராக்கி நிலவியதால் வியாபாரிகள் காய்கறிகள் விலையை உயர்த்தியுள்ளனர்' என்றனர். வடக்கு உழவர் சந்தைக்கு நேற்று, 37 டன் காய்கறியும், தெற்கு உழவர் சந்தைக்கு, 107 டன் காய்கறியும் விற்பனைக்கு வந்தது. வடக்குக்கு, 3,000 பேரும், தெற்குக்கு, 7,000 பேரும் காய்கறிகளை வாங்க வந்தனர்.
வழக்கமாக காலை, 8:00 மணி வரை சந்தை நடக்கும் நிலையில் நேற்று அதிகளவில் வாடிக்கையாளர் வந்ததால், காலை, 6:30 மணிக்கே நிறைவு பெற்றது.வடக்கு உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'காலை, 7:00 மணிக்கு முன்னரே உழவர் சந்தை நிறைவு பெறும் என்பதால், நாளை (22ம் தேதி) வழக்கம் போல் உழவர் சந்தை செயல்படும். மாற்று அறிவிப்புகள் இருந்தால், முன்கூட்டியே விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X