பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை; திருப்பூரில் கடைகள் மூடல்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 கொரோனா தடுப்பு நடவடிக்கை; திருப்பூரில் கடைகள் மூடல்

திருப்பூர்:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கலெக்டர் வேண்டுகோளை ஏற்று, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பெருமளவு கடைகள் அடைக்கப்பட்டன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வணிக வளாகங்கள், பெரியளவிலான கடைகள் வரும் 31ம் தேதி வரை மூடி, ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு இது குறித்து வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தி கடைகளை மூடவும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நான்கு மண்டலங்களில் உள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும் இது குறித்து நேற்று முன்தினம் மாலை மண்டல உதவி கமிஷனர்கள் வாயிலாக கடிதம் அளிக்கப்பட்டது.அதன்படி நேற்று காலை முதல் மாநகரில் அனைத்து ரோடுகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பெரியளவிலான கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள், காய்கறிகள், பலசரக்கு விற்பனை கடைகள், ஓட்டல், பேக்கரி ஆகியன வழக்கம் போல் திறந்திருந்தன. இவற்றிலும் வாடிக்கையாளர் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது.முக்கிய ரோடுகளில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தை விடச் சற்று குறைந்து காணப்பட்டது. மக்கள் நடமாட்டமும் சற்று குறைந்திருந்தது. பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள் கடந்த வாரம் முதலே செயல்படவில்லை. இதன் காரணமாகவும் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் பெருமளவு குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X