பள்ளி சத்துணவு கூடம் இடிந்து விழும் அபாயம்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 பள்ளி சத்துணவு கூடம்  இடிந்து விழும் அபாயம்

திருப்பூர்:திருப்பூர் - பி.என். ரோடு, மேட்டுப்பாளையம் பகுதியில், காமராஜர் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தினுள் மூன்று பகுதிகளில் வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளன.பள்ளி வளாகத்தின் வடக்கு பகுதி சுற்றுச் சுவரை ஒட்டி, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீர் கால்வாய் உள்ளது. ஏறத்தாழ மூன்று அடி அகலமுள்ள இந்த கால்வாய் பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ளது. கட்டி முடித்து பல ஆண்டுளான நிலையில், கால்வாய் சேதமடைந்து கிடக்கிறது.கால்வாய் கட்டுமானம் பெயர்ந்து விழுந்த நிலையில், பள்ளி சுற்றுச் சுவரையும் கழிவு நீர் அரித்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுற்றுச்சுவரில் இரு இடங்களில் முளைத்த மரங்கள் சுவரை பிளந்து வளர்ந்து நிற்கிறது.இதனால், பள்ளியின் சுற்றுச் சுவர் மற்றும் சத்துணவு கூடத்தின் சுவரும் மோசமான நிலையில், அபாயகரமாக காட்சியளிக்கிறது. அசம்பாவிதம் எதுவும் நிகழும் முன்னர் இதை சரி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X