பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு நடவடிக்கை தாலுகா அளவில் மண்டல குழு

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பேரிடர் காலம் போன்று தாலுகா அளவில் மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய, 11 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.தலைமை அரசு மருத் துவமனையில், 'ஐசோலேசன்' மற்றும் 'குவாரன்டைன்' வார்டு அமைக் கப்பட்டு, போதிய அளவிலான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதேசமயம், கொரோனா நோய் பாதிப்பு மற்றும் சந்தேகங்கள் உள்ளிட்டவைகளை கேட்டறியவும், தகவல் தெரிவிக்கும் வகையில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டும் வருகிறது.இங்கு, துணை தாசில்தார், சீனியர் ஆர்.ஐ., ஒரு டாக்டர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பணியாளர் குழுவினர், 24 மணி நேரம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில், காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை பெண் குழுவினரும், இரவு, 8:00 முதல், காலை, 8:00 மணி வரை ஆண் குழுவினரும் பணிபுரிகின்றனர்.குழுவினர் கூறுகையில், 'மக்கள், கட்டுப்பாட்டு அறையை, 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பேரிடர் காலம் போன்று தாலுகா அளவில் மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது.எவரேனும் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், எந்தெந்த பாதையில் அவர்கள் சென்றனர் என்பதை 'ரூட் மேப்' ஆக தொடர்பு குழுவினர் தயாரிப்பர். தொடர்ந்து, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X