ரேஷன் கடை ஊழியர்கள் முக கவசம் அணிய உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்கள் முக கவசம் அணிய உத்தரவு

Added : மார் 21, 2020
Share

திருப்பூர்:தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் பணி, போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.ரேஷன் கடையில், மக்கள் கூடுவர் என்பதால், ஊழியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன்கடை விற்பனையாளர், கட்டுனர்களுக்கு, முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. கடை இயங்கும் நேரத்தில், அடிக்கடி கைகளை சோப்பு மூலமாக நன்கு கழுவிக்கொள்ள வேண்டுமென, வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது.கூட்டுறவு சங்கங்கள் மூலம், பக்கெட், கோப்பை, கை கழுவும் சோப்பு, முகக்கவசம் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. பணியாளர் மட்டுமல்லாது, கடைக்கு வருவோரும், கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர்.இம்மாதத்திற்கான, அனைத்து பொருட்களும் வழங்கிவிட்டதால், இத்தருணத்தில், ரேஷன் கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென, பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X