வேப்பூர் வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பூர் வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு

Added : மார் 21, 2020
Share
வேப்பூர்: வேப்பூர் வாரச்சந்தை ஏலம் தேதி அறிவிப்பின்றி ஒத்தி வைத்ததில் தி.மு.க., மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.வேப்பூர் வாரச்சந்தை வெள்ளிக்கிழமை தோறும் நடக்கிறது. இங்கு, பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகள், மீன்கள், காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். பண்டிகை காலங்களில் ரூ. 5 கோடி வரை ஆடுகளை விற்று,

வேப்பூர்: வேப்பூர் வாரச்சந்தை ஏலம் தேதி அறிவிப்பின்றி ஒத்தி வைத்ததில் தி.மு.க., மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.வேப்பூர் வாரச்சந்தை வெள்ளிக்கிழமை தோறும் நடக்கிறது. இங்கு, பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகள், மீன்கள், காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். பண்டிகை காலங்களில் ரூ. 5 கோடி வரை ஆடுகளை விற்று, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.ஆண்டு தோறும் மார்ச் மாதம் வாரச்சந்தை குத்தகைக் காலம் முடிந்து, வேப்பூர் ஊராட்சி சார்பில் ஏலம் விடப்படும். 2019--20ம் ஆண்டிற்கான குத்தகைக் காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், 2020--21ம் ஆண்டிற்கான குத்தகை ஏலம் நேற்று நடந்தது.ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமை தாங்கினார். துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், துணை பி.டி.ஓ., திலகவதி, ஊராட்சி செயலர் வெங்கடேசன் உடனிருந்தனர். ஏலத்தில் பங்கேற்ற குத்தகைதாரர்களுடன் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.இதனால், பாதுகாப்புக்காக குத்தகைதாரர் உட்பட மூன்று பேர் மட்டும் வளாகத்தில் இருக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கூறியது.இதை குத்தகைதாரர்கள் மற்றும் மக்கள் ஏற்க மறுத்ததால் தேதி அறிவிப்பின்றி ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X