பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு 'படையெடுப்பு'

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா அச்சத்தால், நிறுவனங்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.கொரோனா பயத்தால், பல பனியன் நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருப்பூரில் பணியாற்றும் வடமாநிலத்தவர் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு பயணமாக துவங்கியுள்ளனர்.நேற்று மாலை திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் இரண்டிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் சொந்த ஊருக்கு செல்ல குவிந்தனர்.ரப்திசாகர் எக்ஸ்பிரஸ். நேற்று மாலை, 4:20 மணிக்கு திருப்பூர் வந்தது. முன்பதிவு, பொது பெட்டியில் பெரிய பேக்குகளுடன் அடித்துப்பிடித்து வடமாநிலத்தவர் ஏறினர்.பொது பெட்டிகளில் இடமில்லாததால் கழிப்பிடத்தில் பலர் புகுந்து உட்கார்ந்து கொண்டனர். ரயில் பெட்டி படிக்கட்டில், பலரும் தொங்கியபடி பயணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X