பொது செய்தி

தமிழ்நாடு

நெருக்கடிக்கு கைகொடுக்க 'நிவாரண உதவி': ஆடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருப்பூர்:'கொரோனா'வால் வர்த்தக பாதிப்பை சந்தித்துவரும் ஆடை ஏற்றுமதி துறைக்கு மத்திய அரசு, நிவாரண நிதி உதவி வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழக(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதம்:உலகளாவிய நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது, கொரோனா வைரஸ். அரசின் துணிச்சலான நடவடிக்கைகள், இந்திய மக்களை வைரஸிடமிருந்து பாதுகாக்கும்.
கொரோனாவால், ஆடை உற்பத்தி துறை நெருக்கடிகளை சந்தித்துவருகிறது.அரசு சலுகைகள் கிடைக்காததால், கடந்த 2019ல், ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவடைந்தது. நடப்பு 2020ம் ஆண்டு பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 'கொரோனா'வால், ஆயத்த ஆடை துறையினர் ஏமாற்றமடையும் நிலையே உருவாகியுள்ளது.இந்திய ஆடை ஏற்றுமதி, அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், இங்கிலாந்து, கனடா உட்பட 10 நாடுகளை சார்ந்துள்ளது. கொரோனாவால், அந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பிராண்டட் நிறுவன வர்த்தகர்கள், சில்லரை விற்பனையாளர்கள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கிய ஆடை தயாரிப்பு ஆர்டர்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்; அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.வர்த்தக நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, நிதி மூலதனத்தை உருவாக்கி, ஆயத்த ஆடை துறையினருக்கு நிவாரண நிதி உதவி வழங்கவேண்டும்.
இ.சி.ஜி.சி., ஏற்றுமதி காப்பீட்டு விதிமுறைகளை மேம்படுத்தவேண்டும்; ஏற்றுமதி கொள்கை விதிமுறைகளை எளிதாக்க வேண்டும்.நிறுத்தப்பட்டுள்ள எம்.இ.ஐ.எஸ்., சலுகை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களுக்கான காலத்தை, 24 மாதங்களாக உயர்த்த வேண்டும். வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், கருணை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு நிலுவையில் உள்ள அரசு சலுகைகளை உடனடியாக வழங்கவேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X