பொது செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒத்தி வைப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

பரங்கிப்பேட்டை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரங்கிப்பேட்டை பகுதிகளில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக வரும் 31ம் தேதி வரை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடத்த வேண்டாம் என டி.எஸ்.பி., அறிவுறுத்தினார். அதை ஏற்றுக்கொண்டு, முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்த மாட்டோம் என ஒப்புக் கொண்டனர்.கூட்டத்தில், தாசில்தார் சுமதி, இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், மா.கம்யூ., ஒன்றிய செயலர் ரமேஷ்பாபு, சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ் மற்றும் முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X