பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சத்தில் பஸ்சில் கூட்டம் இல்லை

Added : மார் 21, 2020
Share
Advertisement
 கொரோனா அச்சத்தில் பஸ்சில் கூட்டம் இல்லை

விருத்தாசலம்: கொரோனா அச்சம் காரணமாக, ஒரு பஸ்சில் நால்வர் வீதம் பயணம் செய்வதால், சென்னை போன்ற நெடுந்துார பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததால், நாடு முழுவதும் பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பள்ளி, கல்லுாரிகள் மார்ச் 31 வரை மூடப்பட்ட நிலையில், 10 பேருக்கு மேல் கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களும், பொதுக்கூட்டம், போராட்டங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்ளிட்ட பிற பெருநகரங்களில் கல்வி, வியாபாரம் போன்ற பணிகளில் பணிபுரிந்த பலரும் கடந்த இரண்டு நாட்களாக பஸ், ரயில்களில் சொந்த ஊருக்கு திரும்பினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்கி வந்த சிறப்பு கட்டண ரயில்களை ரத்து செய்தது. நாளுக்கு நாள் பயணிகள் வருகை குறைந்ததால், நேற்று காலை முதல் வெளியூர் சென்ற பஸ்கள் வெறிச்சோடியதால், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. மாவட்டத்திற்குள் கூடுதலாக இயங்கிய பஸ்களையும் நிறுத்தி, ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் அந்தந்த பணிமனைகளில் 10 முதல் 15 பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டன.இது குறித்து போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவர் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளிலும் தலா 10 முதல் 15 பஸ்கள் வீதம் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.சென்னை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் பஸ்களில் 3, 4 பேர் வீதம் செல்கின்றனர். இதனால் பாதியில் பஸ்களை நிறுத்தி, மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப் படுகின்றனர்.குறைந்த எண்ணிக்கையில் செல்லும் பயணிகளை ஒன்று சேர்த்து, ஒரே பஸ்களில் அனுப்பி வைக்கும் பணிக்கென ஒவ்வொரு பணிமனையிலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா தாக்கம் முடியும் வரை இந்த நிலையே நீடிக்கும்' என்றார்.கடலுார்கொரோனா பாதிப்பால், பொழுது போக்கு இடங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.இதனால், பொதுமக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில், கடலுாரில் இருந்து சென்னைக்கு அடிக்கடி பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.இயக்கப்படும் ஒரு சில பஸ்களும் முழுமையாக நிரம்பினால் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னை சென்றுவந்த பஸ்கள் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X