சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பக்தர்கள் வருகையை தவிர்க்க கோவில்களில் தரிசனம் ரத்து

Added : மார் 21, 2020
Share
Advertisement

விருத்தாசலம்: கொரோனா பரவலை தடுக்க வேண்டி, வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வருகையை தவிர்க்க வேண்டி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில், பொது மக்கள் ஒத்துழைப்புடன் அதன் தாக்கத்தை தவிர்க்கும் பணியில் தமிழக சுகாதாரத்துறை களமிறங்கியுள்ளது. இதற்காக பொது மக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் மூடப்பட்ட நிலையில், கோவில், சர்ச், பள்ளிவாசல் போன்ற வழிபாட்டு தலங்களில் அதிக பக்தர்களை கூடாமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் முக்கிய திருவிழாக்கள், திருப்பலி, மசூதிகளில் சிறப்பு தொழுகை ஆகியவற்றை அந்தந்த வழிபாட்டு தலங்கள் சார்பில் ஒத்தி வைத்துள்ளன.அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் வளாகங்களில் பொது மக்கள் தரிசனத்திற்காக வர வேண்டாம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அறிவிப்புகள் சமூக வலைதளங்கள், நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருவதால், பெரும்பாலான பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இவற்றை மீறி வருவோரும் குறிப்பிட்ட நிமிடங்களில் தரிசனம் முடித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.தஞ்சை பெரிய கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்களில் நடை சாத்தப்பட்ட நிலையில், விருத்தாசலம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் கோவில்களுக்கு வருவதை தவிர்த்து, சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு வழிபாட்டு தல நிர்வாகங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X