பொது செய்தி

தமிழ்நாடு

'கோவிட் -19' அவசர கால கடனுதவி: தொழில்துறையினர் மீள பேருதவி

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா வைரஸ் தொற்றால், உலக நாடுகளுடன் தொடர்புடைய ஏற்றுமதி வர்த்தகம் முடங்கிவிட்டது. பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை காப்பாற்ற, தகுந்த உதவி தேவையென, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்திருந்தது.
தொழில் பாதிப்புகளை சமாளிக்க, அவசரகால வங்கிக்கடன் வழங்கும், 'கோவிட்-19' அவசரகால கடனுதவி திட்டத்தை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, மொத்த தொழில் முதலீட்டின் அடிப்படையில், வங்கிகளில் புதிய கடன் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.இதுவரை, தொழில் முதலீட்டு வரம்பில், 7.50 சதவீதம் வரை கடன் பெறும் வாய்ப்பு இருந்தது; தற்போது, கூடுதலாக, 10 சதவீதம் அளவுக்கு கடன் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில், 7.25 சதவீத வட்டியில், அதிகபட்சமாக, 200 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.சரியான வங்கி பரிவர்த்தனைகளை பராமரிக்கும் தொழில்துறையினர், கடன்பெறும் தகுதியை பெறுகின்றனர். இத்திட்டத்தில் பெறப்படும் கடன்களை, கடனுதவி பெற்றதில் இருந்து, ஓராண்டுக்குள், மாத தவணைகளாக திருப்பி செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறுகையில், ''அவசரகால உதவியை உடனடியாக அறிவித்த மத்திய நிதி அமைச்சர், மத்திய ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கி ஆகியோருக்கு, நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளோம். உலக அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து, மீண்டு வர இத்தகைய உதவி மிகவும் உதவியாக இருக்கும்,'' என்றார்.இக்கட்டான காலநிலையில், 'ஸ்டேட் பாங்க் ஆப்' இந்தியா வங்கியின் அறிவிப்பு, நிம்மதி அளிப்பதாக, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இதேபோல் மற்ற வங்கிகளும் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டுமென, வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X