சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி மாணவர் சாவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

கடலுார்: கடலுார் அருகே ஏரியில் மூழ்கி, பிளஸ் 1 மாணவர் இறந்தார்.கடலுார் முதுநகர், வீரபத்திர சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமன் மகன் புகழேந்தி, 17; அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், புகழேந்தி தனது நண்பர்களுடன் நேற்று மாலை 4 மணியளவில் கேப்பர் மலையில் உள்ள கொண்டங்கி ஏரிக்கு குளிக்க சென்றார். ஏரியில் இறங்கி குளித்தபோது, புகழேந்தி, சேற்றில் சிக்கிக் கொண்டார். உடன் வந்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த கடலுார் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 5:30 மணியளவில் புகழேந்தியை சடலமாக மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கடலுார் முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X