சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அழுகிய நிலையில் ஆண் சடலம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டில், துாக்கில் தொங்கியபடி, அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் ஜெயில் தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து வந்த போலீசார் கட்டடத்தினுள் சென்று பார்த்ததில், துாக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதிையச் சேர்ந்த பாவாடை மகன் சுப்ரமணியன், 48, என்பதும், இவரது மனைவி கடந்த 13 வருடத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டதால், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தது தெரிய வந்தது. மேலும், தோல் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி முதல் வீட்டிற்குச் செல்லவில்லை.இதனால், சுப்ரமணியன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் உடலை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X