பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' முன்னெச்சரிக்கையாக கோவில்களுக்கு கொஞ்ச நாள் வராதீங்க!

Added : மார் 21, 2020
Share
Advertisement
  'கொரோனா' முன்னெச்சரிக்கையாக கோவில்களுக்கு கொஞ்ச நாள் வராதீங்க!

உடுமலை:உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உட்பட அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள கோவில்களில் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது; ஆகம விதிப்படி, சுவாமிகளுக்கு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உடுமலை நகரிலும், பொதுமக்கள் கூட்டமாக சேருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை, விளையாட்டு மைதானங்கள், பூங்கா, திருமூர்த்திமலை, அமராவதி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளால், பிரதான ரோடுகளில் போக்குவரத்துறை குறைந்து வருகிறது.மருத்துவம், உணவு போன்ற அத்யாவசிய பணிகளை தவிர, பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என மக்கள் கூடும் பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுவதோடு, கைகழுவிய பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மக்கள் அதிகம் வந்து செல்லும் கோவில்களிலும், நேற்று முதல் வரும், 31 வரை, பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையடிவாரத்தில், மும்மூர்த்திகள் எழுந்தருளி வரும், அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஏற்கனவே, மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல், பாலாற்றின் கரையிலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவிலுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளது.
மூன்று கால நித்ய பூஜைகள் மட்டும் சிவாச்சார்யார்கள் மேற்கொள்கின்றனர். மற்ற நேரங்களில், கோவில் நடை சார்த்தப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதே போல், உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், கொழுமம் தாண்டேஸ்வரசுவாமி கோவில் உட்பட அறநிலைத்துறை நிர்வாகத்திலுள்ள கோவில்களில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கவில்லை. கோவில்கள் பூட்டப்பட்டு, சுவாமிகளுக்கு மட்டும் வழக்கமான பூஜைகள் நடந்து வருகிறது. சனிப்பிரதோஷம் உட்பட சிறப்பு வழிபாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 31ம் தேதி வரை, சுவாமி தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவில் ஆகம விதிகளின்படி, அனைத்து பூஜைகளும் வழக்கம் போல் நடக்கும்,' என்றனர்.
குரங்குகள்மீண்டும் வனவாசம்
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர்கோவில் வளாகம், பஞ்சலிங்கம் அருவிக்கு செல்லும் வழித்தடத்தில், நுாற்றுக்கணக்கான குரங்குகள் வசிக்கின்றன. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வழங்கும் உணவுகள், அவர்களிமிருந்து பிடுங்கும் உணவுகளை, உட்கொண்டு, அவற்றின் இயற்கையான வாழ்வியலை மறந்து, சுற்றி வந்தன.தற்போது, அருவி மற்றும் கோவில் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்களிடமிருந்து எளிதாக கிடைக்கும், செயற்கை உணவுகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவை வரும், 31ம் தேதி வரை, வனத்திற்குள் சென்று, அவற்றின் இயல்பான வாழ்வியலை தொடரவும், பழ மரங்களையும், இலைகளையும் தேடிச்செல்லும் நிலையை, 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X