எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

டில்லி வர முடியவில்லை' : எம்.பி.,க்களின் கோரிக்கையால் நேரம் மாற்றம்

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
டில்லி வர முடியவில்லை' : எம்.பி.,க்களின் கோரிக்கையால் நேரம் மாற்றம்

கொரோனா பரவல் பிரச்னையால், உள்நாட்டு விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், எம்.பி.,க்களால், பார்லி.,க்கு குறித்த நேரத்தில் வர முடியாத சூழ்நிலையில், வரும், 23 மற்றும் 30 ஆகிய இரு திங்கட்கிழமைகளில் மட்டும், பார்லி.,யின் அலுவல் நேரம் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது.

பார்லி.,யில், பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் அமர்வு, ஏப்ரல், 3 வரை நடக்கவிருக்கிறது. ஆனால், கொரோனா பரவல் பீதியால், எம்.பி.,க்கள் பலரும், கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள வேண்டுமென கோரி வருகின்றனர்.


குழப்பம்



ஆனால், பிரதமர் மோடியோ, ''திட்டமிட்டபடி பார்லி., கூட்டத்தொடர் நடைபெறும்,'' என, உறுதியாக தெரிவித்து விட்டார். இதையடுத்து, பார்வையாளர்கள் வருகை நிறுத்தப்பட்டு, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமே, பார்லி.,க்கு வந்து போகின்றனர்.இந்நிலையில், கொரோனா பிரச்னையால், நேற்று முன்தினத்திலிருந்து, உள்நாட்டு விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டு, இயக்கப்படும் சொற்ப விமானங்களின் நேரமும், சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.இதனால், டில்லிக்கு, திட்டமிட்டபடி எந்த விமானமும் வர முடியாமல் குழப்பம் நிலவுகிறது.
இதை, எம்.பி.,க்கள் சுட்டிக்காட்டி, தங்கள் வாதத்தை தீவிரப்படுத்தினர். லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா தலைமையில், நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், இவ்விவகாரம் பேசப்பட்டது. அனைத்து கட்சி எம்.பி.,க்களும், தங்களது சிரமங்களை கூறினர்.


சிக்கல் எழலாம்



வார விடுமுறை நாட்களான, சனி மற்றும் ஞாயிறில் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு, மீண்டும் திங்கள் கிழமையில், டில்லிக்கு, விமானம் மூலம், காலை, 11:00 மணிக்கு முன்பாக, வர முடியாத நிலை, ஏற்பட்டிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.இதையடுத்து, வரும், 23 மற்றும் 30 ஆகிய இரு திங்கட்கிழமைகளில் மட்டும், பார்லி., அலுவல் நேரம், காலை,11:00 மணி என்பது மாற்றப்பட்டு, இரு சபைகளும், மதியம், 2:00 மணிக்கு கூடும் என, நேற்று அறிவிக்கப்
பட்டது.ஆனால், வரும் நாட்களில், கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் அதிகமாகி, சூழ்நிலை மாறினால், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதுமாக நடைபெறுவதில், சிக்கல் எழலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-மார்-202014:56:36 IST Report Abuse
Lion Drsekar பாராளுமன்றக்கூட்டம் நடைபெறுகிறது என்றால் ஒரு தேர்வு போல் பயந்து அனைவது மாணவர்களும் உள்ளே சென்று முழுநேரமும் இருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் போடவேண்டும், மேலும் விடுமுறையில் சென்றவர்கள் மருத்துவ சான்றிதழ்கள் அளிக்கவேண்டும் படி சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும், எப்போது பார்த்தாலும் அதுவும் நேரடி ஒளிபரப்பில் ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள் மற்றவர்கள் ?? எதற்க்காக மக்களை இவர்களை தேர்ந்தேடுத்தார்கள்? இதே போன்று மாணவர்களும் செய்தால் என்னாகும், கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் பொருந்தும், குறிப்பாக இன்றைக்கு இறந்து பிரிவுகள்தான் மக்களை நல்வழிப்படுத்தவேண்டும் ஒன்று திரைப்படம் மற்றொன்று அரசியல் அமைப்பு .இவர்களின் குரல்தால்தான் மக்களின் குரலாக இருக்கிறது, இன்னமும் சொல்லப்போனால் இந்த இரண்டு துறையில் இருப்பவர்கள் மட்டுமே மனிதர்களாக கருதப்படுகின்றனர், இதுதான் உண்மையும் கூட, நல்ல வேலை உயிரோடு இருக்கும் போதே நம் கருத்துக்களை நாமே தெரிந்து கொண்டு, நமக்கென்று வாக்களிக்கும் சக வாசகர்கள் அளிக்கும் மதிப்பெண்களே நமது வாழ்க்கைக்கு சான்று, இதுவும் இல்லையென்றால் நாம் யார் என்று நமக்கே தெரியாமல் போயிருக்கும், வாழ்க தினமலர், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X