பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பூர் வார சந்தைக்கு பூட்டு

Added : மார் 21, 2020
Share
Advertisement

வேப்பூர்: வேப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரச்சந்தை வளாகம் பூட்டப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.வேப்பூர் வாரச்சந்தை வெள்ளிக்கிழமை தோறும் நடக்கிறது. இங்கு, ஆடு, மீன் , காய்கறிகள், மளிகை பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். இதனால் சென்னை, விழுப்புரம், வேலுார், துாத்துக்குடி, மதுரை, திருச்சி, ஊட்டி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள்ள மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வாரசந்தையில் ஒரே நாளில் 2 கோடி ரூபாய்கு மேல் பொருட்கள் விற்பனை நடைபெறும். மேலும் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தலிருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச்செல்வர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரச்சந்தை உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதனையறியாத வியாபாரிகள் நேற்று அதிகாலை வாரச்சந்தைக்கு விற்பனை செய்து வந்தனர்.தகவலறிந்த வேப்பூர் ஊராட்சி அதிகாரிகள் அரசு உத்தரவு குறித்து வியாபாரிகளிடம் கூறி, வாரச்சந்தை முழுவதும், கிருமி நாசினி தெளித்து சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.பின்னர், வேப்பூர் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம், வருவாய் ஆய்வாளர் பழனி, துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், ஊராட்சி செயலர் வெங்கடேசன் முன்னிலையில், வாரச்சந்தை வளாகம் பூட்டப்பட்டது.ரூ. 2 கோடிக்கு வர்த்தகம் பாதிப்புகொரோனா எச்சரிக்கையால் கோழிக்கறி வாங்குவதை பொதுமக்கள் தவிர்த்து வருவதால் நேற்று சந்தைக்கு வழக்கத்தை விட கூடுதலாக 4 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. ஆனால், 4 ஆடுகள் மட்டும் விற்பனையான நிலையில் சந்தைக்கு பூட்டு போடப்பட்டது. இதனால் வெளியூர்களிலிருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைத்தனர். இதனால் 2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X