பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று நாள் விடுமுறை; களைகட்டிய நகராட்சி சந்தை: வியாபாரிகள் வருகை அதிகரிப்பு; காய்கறி விலை உயர்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement
 மூன்று நாள் விடுமுறை; களைகட்டிய நகராட்சி சந்தை: வியாபாரிகள் வருகை அதிகரிப்பு; காய்கறி விலை உயர்வு

உடுமலை:உடுமலை நகராட்சி, சந்தை வளாகம், 16.14 ஏக்கரில் அமைந்துள்ளது. 34 கமிஷன் கடைகள் மற்றும் 314 நிரந்தர கடைகள் உள்ளன.உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என தினமும், 700 டன் வரை காய்கறிகள் வரத்து வருகிறது.உள்ளூர் வியாபாரிகள் மட்டுமன்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து, காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.
'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதமர், நாளை (22ம் தேதி), பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வராமல், ஊரடங்கு போல் இருக்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை அனைத்து கடைகளும் விடுமுறை விடப்படுவதால், இன்று (21ம் தேதி), காய்கறி ஏலம் எடுக்க வியாபாரிகள் வருகை இருக்காது, என்பதால், இன்று சந்தையிலுள்ள கமிஷன் கடைகள் அனைத்தும் விடுப்பு அறிவித்துள்ளன. 22ம் தேதி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததால், ஒரு நாள் விடுமுறையாகிறது.உடுமலை வாரச்சந்தை வழக்கமாக, திங்கட்கிழமை கூடுகிறது. அனைத்து வாரச்சந்தைகளையும் மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், அன்றும் சந்தை வளாகம் பூட்டப்பட உள்ளது. அதனால், தொடர்ந்து 21 முதல் 23 வரை மூன்று நாட்கள், சந்தை மூடப்பட உள்ளது. இதனால், நேற்று காய்கறிகள் வரத்தும், வியாபாரிகள் வருகையும் அதிகரித்து, சந்தை வளாகம் களை கட்டியது. காய்கறிகளின் விலையும், கிலோவுக்கு, 5 முதல் 10 ரூபாய் வரை உயர்ந்தது.நேற்றைய விற்பனைக்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்டது. 120 சரக்கு ஆட்டோ, வேன் மூலம், 500 டன் வரத்து இருந்தது. கடந்த சில நாட்களாக, 14 கிலோ கொண்ட பெட்டி, 60 ரூபாய் வரை விற்று வந்தது. நேற்று வியாபாரிகள் போட்டி, போட்டு ஏலம் எடுத்ததால், ஒரு பெட்டி, 90 முதல் 120 ரூபாய் வரை விற்றது. கத்தரி ஒரு மூட்டை, 80 முதல் 90 வரை விற்று வந்தது, நேற்று 150 ரூபாய்க்கு விற்றது.
44 கிலோ கொண்ட உருளைக்கிழங்கு மூட்டைக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 1,300 ரூபாய்க்கு விற்றது. அதே போல், 8 முதல் 10 ரூபாய் வரை விற்று வந்த மிளகாய் விலை நேற்று உயர்ந்து, 15 ரூபாய்க்கு விற்றது. பல்லாரி வெங்காயம், கிலோ, 22 ரூபாய் வரை விற்று வந்தது, நேற்று 25 ரூபாயாக உயர்ந்தது. சின்ன வெங்காயம், 35 முதல், 45 ரூபாய் வரை விற்று வந்தது, நேற்று, ஒரே நாளில், கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்தது.'கொரோனா'வுக்கு பூண்டு சிறந்தது என பரவிய வதந்தியால், விற்பனை அதிகரித்து, கிலோ, 105 ரூபாய்க்கு விற்று வந்தது, நேற்று, கிலோவுக்கு, 20 ரூபாய் உயர்ந்தது.
பீதி வேண்டாம்!
'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி, பால், பேக்கரி, ஓட்டல், டீக்கடைகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், வீண் வதந்தி காரணமாக, கடந்த மூன்று நாட்களாக மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாது; பொருட்கள் இருப்பு வைக்க தேவையில்லை, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X