வேர்கடலை விலை குறைவதால் விவசாயிகள் கவலை! ...கொரோனா அச்சத்தால் ஏற்றுமதி கடும் பாதிப்பு | Dinamalar

தமிழ்நாடு

வேர்கடலை விலை குறைவதால் விவசாயிகள் கவலை! ...கொரோனா அச்சத்தால் ஏற்றுமதி கடும் பாதிப்பு

Added : மார் 21, 2020
Share
புதுச்சத்திரம்: கொரோனா அச்சத்தில் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளதால் வேர்கடலை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இந்தியாவில் குறிப்பாக ஆந்திரா, குஜராத், தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிகளவில் வேர்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் புதுச்சத்திரம், கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட
 வேர்கடலை விலை குறைவதால் விவசாயிகள்  கவலை! ...கொரோனா அச்சத்தால் ஏற்றுமதி கடும் பாதிப்பு

புதுச்சத்திரம்: கொரோனா அச்சத்தில் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளதால் வேர்கடலை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்தியாவில் குறிப்பாக ஆந்திரா, குஜராத், தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிகளவில் வேர்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் புதுச்சத்திரம், கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் வேர்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.வேர்கடலை பயிரிடுவதற்கு வண்டல், செம்மண் நிலங்கள் ஏற்றவையாக கருதப்படுகிறது. தமிழகத்தில் கார்த்திகை பட்டத்தில் அதிகளவில் வேர்கடலை பயிரிடுவது வழக்கம். அதையொட்டி புதுச்சத்திரம், அதன் சுற்றுப் பகுதிகளான குறிஞ்சிப்பாடி, ஆண்டார்முள்ளிப்பள்ளம், காயல்பட்டு, வாண்டையாம்பள்ளம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு, சேந்திரக்கிள்ளை, தச்சக்காடு, கொத்தட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு கார்த்திகை பட்டத்தில் வேர்கடலை பயிரிட்டனர்.இந்நிலையில் தற்போது புதுச்சத்திரம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வேர்கடலை அறுவடை நடந்து வருகிறது. எனவே அறுவடை செய்த வேர்கடலையை விவசாயிகள் காயவைத்து மில்லுக்கு எடுத்துச்சென்று, உடைத்து பயிராக ஒரு மூட்டை (80 கிலோ) கடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், சில விவசாயிகள் தனியார் மில்லிலும் விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் வேர்கடலை அறுவடை துவங்கிய நேரத்தில் ஒரு மூட்டை 6500 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து ஒரு சில நாட்களில் படிப்படியாக விலை உயர்ந்து தரமான பயிர் மூட்டை 7200 ரூபாய்வரை விற்பனையானது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்றுமதி குறைந்ததையொட்டி, வேர்கடலை விலை நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. இதனால் நேற்று ஒரு மூட்டை வேர்கடலை விலை 5800 முதல் 5900 ரூபாய் வரையே விற்பனையானது.

எனவே கடந்த 10 நாட்களுக்குள் ஒரு மூட்டை வேர்கடலை விலை சுமார் 1000 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. இதனால் தற்போது வேர்கடலை அறுவடை செய்து வரும் விவசாயிகள், விலை குறைவால் நஷ்டம் ஏற்படமோ என கவலையடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X