பொது செய்தி

தமிழ்நாடு

கிழுவங்காட்டூரில் ஆண்டு முழுவதும் கீரை உற்பத்தி

Added : மார் 21, 2020
Share
Advertisement
 கிழுவங்காட்டூரில் ஆண்டு முழுவதும் கீரை உற்பத்தி

உடுமலை:ஆண்டு முழுவதும், பல்வேறு கீரை வகைகளை, உற்பத்தி செய்து, கிழுவங்காட்டூர் விவசாயிகள் அசத்தி வருகின்றனர்.உடுமலை அருகேயுள்ள கிழுவங்காட்டூர் கிராமத்தில், விவசாயம் பிரதானமாக உள்ளது. பிற பகுதிகளில், பல்வேறு சாகுபடிக்கு ஆர்வம் காட்டினாலும், கிழுவங்காட்டூர் கிராமம் மட்டும், கீரை சாகுபடியை மட்டுமே பிரதானமாக மேற்கொண்டு வருகிறது.பல ஆண்டுகளாக உடுமலை நகருக்கும், உழவர் சந்தைக்கும், இக்கிராமத்தில் இருந்து வரும் கீரையே அனைவரின், தேர்வாக உள்ளது.கோடை காலம் துவங்கினாலும், கிராமத்தில், தற்போதும், குறுகிய பரப்பில் எங்கு பார்த்தாலும், சிறுகீரை, பச்சை அரைகீரை, சிவப்பு அரைகீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, மல்லி, பாலக்கீரை, தண்டங்கீரை உள்ளிட்ட கீரைச்செடிகள் செழித்து வளர்ந்துள்ளது.கிழுவங்காட்டூர் விவசாயிகள் கூறியதாவது: விளைநிலங்களை பாத்தியாக பிரித்து, பல வகை கீரைகளை விதைப்பு செய்கிறோம். இதனால், அனைத்து வகை கீரைகளும், சுழற்சி முறையில் அறுவடை செய்ய முடியும். இதில், சிறு கீரை, அரை கீரை உட்பட வகைகள், விதைத்த, 25ம் நாளில் அறுவடை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு, குறைந்தபட்சம், 2 ஆயிரம் கட்டுகள் வரை கீரை கிடைக்கிறது.மணத்தக்காளி மற்றும் பாலக்கீரை மட்டும், தொடர்ந்து, 6 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். விதைப்பின் போது ஒரு தண்ணீரும், அறுவடைக்கு முன் ஒரு தண்ணீர் என, இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானதாகும். மற்ற காய்கறி பயிர் மற்றும் தென்னை சாகுபடியை ஒப்பிடும் போது கீரை சாகுபடிக்கு குறைந்தளவு தண்ணீர் இருந்தால் போதுமானதாகும்.பழநி, பொள்ளாச்சி உட்பட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், கீரைகளை நேரடியாக தோட்டங்களுக்கே வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். உடுமலை தினசரி மற்றும் உழவர் சந்தைக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கிறோம்.உள்ளூர் சந்தைகளுக்கு, நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 100 கட்டுகள் வரை விற்பனைக்கு எடுத்து செல்கிறோம். தேவை அடிப்படையில், கட்டு, 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே, கீரை சாகுபடியில் இருந்து நாங்கள் மாறுவதில்லை. இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X