பொது செய்தி

தமிழ்நாடு

சுழற்சி முறையில் ஊராட்சிகளில் சுற்றுப்புற சுகாதாரம் பராமரிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை ஒன்றிய ஊராட்சிகளின் சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்க, சுழற்சி முறையில் பணியாளர்களை ஈடுபடுத்தி, நாள்தோறும் இரவு வரை துாய்மைப்பணிகள் நடக்கிறது.உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களையும், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் பின்பற்றி வருகின்றனர்.ஒன்றிய அலுவலகத்துக்கு வருவோர், கைகளை சுத்தம் செய்த பின்னர் வரவேண்டும். ஊராட்சி நிர்வாக அலுவலகங்களிலும், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறது.இதேபோல் ஊராட்சிகளில் பொதுமக்கள் கூடும் இடமான தபால் அலுவலகம், வி.ஏ.ஒ., அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்களில், கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்குவது மற்றும் அலுவலர்கள் குழுவினர் வீடு வீடாகச்சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அரசு அறிவுறுத்தப்பட்டதிலிருந்து, அனைத்து கிராமங்களிலும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதனால், கிருமி நாசினிகள் கிடைப்பதிலும் தட்டுபாடு ஏற்படுவதாக ஊராட்சி செயலாளர்கள் கூறுகின்றனர். மேலும், சாதாரண நாட்களில் துப்புரவு பணிகள் மதியம் 12:00 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும். தற்போது, கூடுதல் நேரமாக, காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் துப்புரவு பணியாளர்கள் துாய்மைப்பணிகளை மேற்கொள்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X