பொது செய்தி

தமிழ்நாடு

குமராட்சி ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement
 குமராட்சி ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்பு

காட்டுமன்னார்கோவில்: குமராட்சி ஊராட்சி கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. காட்டுமன்னார்கோவில் குமராட்சி ஊராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் துவங்கியது. குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் கிருமி நாசினி தெளிக்கும் பணியை துவக்கி வைத்தார். குமராட்சியில் உள்ள அரசு அலுவலகங்கள், துவக்கப்பள்ளி, பயணியர் நிழற்குடை, சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் , கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் அலுவலகம், குமராட்சி ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கைத்தெளிப்பான் மூலம் கிருமிநாசினி அடிக்கப்பட்டது.ஊராட்சி செயலர் பாக்யராஜ், சிறப்பு விருந்தினராக குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ராஜசேகரன், வர்த்தக சங்க கவுரவத் தலைவர் சக்கரவர்த்தி,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, விஜயா, வார்டு உறுப்பினர்கள் மலையசிம்மன், புகழேந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X