பொது செய்தி

தமிழ்நாடு

அறுவடை செலவுக்கு கட்டுப்படியாகாத பீட்ரூட் : கடனாளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 அறுவடை செலவுக்கு கட்டுப்படியாகாத பீட்ரூட் : கடனாளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள்

உடுமலை:இரண்டு மாதங்களுக்கு மேல் செடியை பராமரித்து, பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு, களையெடுத்து, உரமிட்டு, அறுவடைக்கு தயாரானாதும், பீட்ரூட்டை கொள்முதல் செய்ய ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கரிசல் மண் பூமிகளில், அதிகளவு பீட்ரூட் சாகுபடி செய்யப்படுகிறது. மலைப்பிரதேச காய்கறியாக இருந்தாலும், உடுமலை பகுதி களில் செழிப்பாக வளர்வதால், அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.கிணற்றுப்பாசனத்துக்கு, எக்டருக்கு, 6 கிலோ விதைகள் நடவு செய்கின்றனர். அதற்கு முன்பாக, அடியுரம் இட்டு, பார் பிடித்தல் உட்பட பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்கே, ஏக்கருக்கு, 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. நடவுக்கு பின்னர், களையெடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் என 65 நாட்களில், அறுவடைக்கு தயாராகும், சாகுபடியில், ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.நடப்பு சீசனில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, முளைப்புத்திறன் குறைந்தும், செடிகள் கருகியும், காய்ப்பிடிப்பு குறைந்தும் பெருமளவு மகசூல் குறைந்துள்ளது.வழக்கமாக, ஏக்கருக்கு, 15 முதல் 20 டன் வரை மகசூல் இருக்கும்; தற்போது, ஐந்து முதல் 10 டன் மட்டுமே கிடைத்து வருகிறது. இவ்வாறு, சாகுபடியில் சோதனைகளை கடந்தாலும், பீட்ரூட் விலை ஒட்டுமொத்தமாக விவசாயிகளை விரக்தியடைய வைத்துள்ளது.கேரளா வியாபாரிகள் வருகை குறைவு உட்பட காரணங்களால், பீட்ரூட் விலை கிலோவுக்கு, 2 ரூபாய் முதல் 6 ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. அறுவடை செய்த செலவுக்கு கூட விலை கட்டுப்படியாகாது நிலை ஏற்பட்டுள்ளது.விலை நிலவரம் ஏற்படுத்திய அதிர்ச்சியால், பலர் அறுவடை கூட செய்யாமல், செடிகளை அப்படியே விட்டுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'பீட்ரூட் விலை வீழ்ச்சியால், சாகுபடி செலவுக்கு வாங்கிய கடனை கூட திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பீட்ரூட்டில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. இது குறித்து தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இச்சாகுபடியை முற்றிலுமாக கைவிடும் நிலை உருவாகும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X