சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காப்பு காட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிரேதம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உள்ள காப்பு காட்டில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த வயலூர் காப்புக் காட்டில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக விருதாச்சலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், விருத்தாசலம் டி.எஸ்.பி., இளங்கோவன், மற்றும் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த நபர் யார் என்பது குறித்தும், அவர் அடித்து கொலை சேய்யப் பட்டாரா என்பது குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த காப்புக்காட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல், கடந்த 3 மாதங்களுக்கு முன், முதியவர் சடலம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல் தொடர்ச்சியாக, வயலுார் காப்புக் காட்டில் அடையாளம் தெரியாத பிணங்கள் கிடப்பது தொடர்கதையாக உள்ளது. எனவே, போலீசார் அப்பகுதியில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X