பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டோரத்தில் தடுப்பு சுவர் பெயர்ந்து விழுந்தது: கேள்விக்குறியாகும் திட்ட பணிகளின் தரம்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 ரோட்டோரத்தில் தடுப்பு சுவர் பெயர்ந்து விழுந்தது: கேள்விக்குறியாகும் திட்ட பணிகளின் தரம்

உடுமலை:உடுமலை அருகே, கட்டுமான பணிகள் நிறைவு பெறும் முன்னரே, ரோட்டோரத்தில், தடுப்புச்சுவர் பெயர்ந்து, கீழே விழுந்துள்ளது, நெடுஞ்சாலைத்துறை திட்ட பணிகளின் தரத்தை கேள்விக்குறியாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.உடுமலையில் இருந்து பள்ளபாளையம், குறிச்சிக் கோட்டை வழியாக அமராவதி செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், பராமரிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டம் சார்பில், இந்த ரோட்டில் குறிச்சிக்கோட்டை அருகே, ரோட்டோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தரமில்லாமல், திட்ட விதிகளை பின்பற்றாமல், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், நெடுஞ் சாலைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், அங்குள்ள தடுப்புச்சுவர், பெயர்ந்து அருகிலுள்ள பள்ளத்தில் கிடந்ததை பார்த்து, மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனுவையும் அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ளனர்.தடுப்புச்சுவருக்கும், ரோட்டுக்கும் இடைவெளி இருக்கும் வகையில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், வரிசையாக தடுப்புகள் கீழே விழும் அவலம் அப்பகுதியில் நிலவுகிறது.பல ஆயிரம் ரூபாய் அரசு நிதியில், தரமில்லாமல், கட்டப்படும் தடுப்புச்சுவர்கள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: குறிச்சிக்கோட்டை அருகே, தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதியில், இரவு நேரத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தடுப்புச்சுவர் இடிந்துள்ளது.அவ்வாகனத்தை கண்டறிய போலீசில் புகார் தெரிவிக்கப்படும். இடிந்துள்ள சுவரை சீரமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. கட்டுமான பணிகள் தரம் குறித்து குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X