சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஓசூர் : தளியில், 10ம் வகுப்பு படித்து விட்டு, நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த, போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதியில், போலி டாக்டர் ஒருவர் கிளினிக் நடத்தி வருவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி, மருந்தக ஆய்வாளர் ராஜிவ்காந்தி உட்பட, மருத்துவ குழுவினர், தளி போலீசார் உதவியுடன், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தளி பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த தனியார் கிளினிக்கில், ஓசூர் குறிஞ்சி நகரை சேர்ந்த மாணிக்கம், 50, என்பவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு, நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.

அவர், போலி டாக்டர் என்பது உறுதியானதால், போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், 15 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதும், நான்கு மாதங்களாக தளியில் கிளினிக் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X