பொது செய்தி

தமிழ்நாடு

ரசாயன கழிவுகள் கொட்டியது யார்?மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement

கடலுார்: கடலுார் அருகே குடியிருப்புக்கு மத்தியில் ரசாயன கழிவுகளை கொட்டியவர்கள் குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

கடலுார் அடுத்த எம்.புதுார், திடீர் குப்பம் பகுதிக்கு மத்தியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் இரவு நேரத்தில் யாரோ டிராக்டரில் ரசாயன கழிவுகளை கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். அப்பகுதியில் அங்கன்வாடி மையம், பள்ளி உள்ள நிலையில் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதையடுத்து கடலுார் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஐயனார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் அனந்தராமன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி ஆகியோர் பார்வையிட்டு, கொட்டியது யார், எந்த மாதிரியான ரசாயன கழிவு என ஆய்வு செய்தனர். ரசாயன கழிவை ஆய்வுக்கும் எடுத்து சென்றனர்.பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கழிவுகளை உடனடியாக அகற்றவும், மீண்டும் கொட்டாமல் தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X