பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' முன் எச்சரிக்கை: கடைகளை மூட வேண்டுகோள்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 'கொரோனா' முன் எச்சரிக்கை: கடைகளை மூட வேண்டுகோள்

உடுமலை:மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர, மற்ற கடைகளை மூட வேண்டும், என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.'கொரோனா' வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக, திருப்பூர் மாவட்டத்தில், மருத்துவமனை, மருந்துக்கடைகள், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கடைகள், பேக்கரி, ஓட்டல்களை தவிர்த்து, பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் என அனைத்து வகையான கடைகளையும், வரும், 31 வரை தற்காலிக விடுமுறை அளித்து, மூட வேண்டும்.அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியிருந்தார்.நேற்றுமுன்தினம், நகராட்சி சார்பில், வியாபாரிகள் சங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஆனால், உடுமலையில் வழக்கம் போல், நேற்று மற்ற கடைகள் திறக்கப்பட்டு, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் கூட்டத்துடன் வியாபாரம் நடந்தது.இதனையடுத்து, தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள், சிவக்குமார், செல்வம், செல்வக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, நகை கடைகள், துணிக்கடைகளுக்கு நேரடியாக சென்று நோட்டீஸ் வழங்கியதோடு, உடனடியாக அடைக்கவும், மீறி திறந்திருந்தால், பூட்டி 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்தனர். இதனையடுத்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.மளிகை, காய்கறி தவிர அனைத்து கடைகளும், இன்று திறக்கப்பட்டால், உடனடியாக பூட்டி 'சீல்' வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X