பொது செய்தி

தமிழ்நாடு

மாநில எல்லையில் டி.ஆர்.ஓ., ஆய்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement

உடுமலை:மாநில எல்லை சோதனைச்சாவடியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலும், இந்த வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில், மூணாறு, மறையூர் பகுதிகளிலிருந்து, தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்கான உடுமலை வருகின்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகளும் இந்த வழித்தடத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்,அதனால், தமிழக - கேரளா எல்லையான, ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்திற்குள் நுழையும், அனைத்து வாகனங்களும் முழுமையான விசாரணை மற்றும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வரும் அனைத்து வாகனங்களுக்கு, கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.இரவு, பகல் என, 24 மணி நேரமும், கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியை, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கோட்டாட்சியர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X