சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமை : கணவர், மாமியார் கைது

Added : மார் 21, 2020
Share
Advertisement

கடலுார்: கடலுாரில், வரதட்சணை கொடுமை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டார். கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், மஞ்சக்குப்பம், குமார் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் ராஜேஸ்வரி, 28. கூத்தப்பாக்கம், ஏழுமலை மகன் அருண்குமார் 29; தனியார் ஐடிஐ.,யில் ஆசிரியராக பணிபுரிகிறார்.இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, ராஜேஸ்வரியின் தாய் 30 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை சீதனமாக செய்திருந்தார்.இந்நிலையில், வரதட்சணை போதவில்லை என கூறி, அருண்குமார், அவரது தாய் செல்வி, 56, தந்தை ஏழுமலை, அண்ணி பிரித்தி உள்ளிட்டோர், ராஜேஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். நேற்று முன்தினம் அருண்குமார் உள்ளிட்ட நால்வரும் மேலும், பணம் மற்றும் பொருட்கள் கேட்டு ராஜேஸ்வரியை திட்டி, தாக்கி, அவரது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அவரது தாய் செல்வநாயகி வீட்டிற்கு சென்ற அவர், விரக்தியடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் செல்வநாயகி அளித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, அருண்குமார், அவரது தாய் செல்வி ஆகியோரை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர். ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 8 மாதங்களை ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X