அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீதிக்கு கிடைத்த வெற்றி: வாசன்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : 'ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிர்பயா வழக்கில், தற்போது நீதி கிடைத்திருந்தாலும், அந்த வெற்றி, நீதிக்கு கிடைத்த வெற்றி' என, த.மா.கா., தலைவர், வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:நிர்பயா வழக்கில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, கொலைக்கு காரணமான கொடியவர்களுக்கு, காலம் தாழ்ந்து துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு, நீதி கிடைத்து உள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூர செயலுக்கு, தற்போது, நீதி கிடைத்திருந்தாலும், அந்த வெற்றி நீதிக்கு கிடைத்திருக்கிற வெற்றி. இனிவரும் காலங்களில், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க, மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, பொது மக்களும் உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X