பொது செய்தி

தமிழ்நாடு

'குடிமகன்'களுக்கு சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : 'மது அருந்தினால், கொரோனா வைரஸ் பரவாது என்ற தகவல், முற்றிலும் தவறானது' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

'மது அருந்துபவர்களுக்கு, கொரோனா வைரஸ் பரவாது; பாதிக்கப்பட்டவரிடம் இருந்து முதல், 12 மணி நேரம் மட்டுமே, மற்றவர்களுக்கு, கொரோனா வைரஸ் பரவும். 'கோழி, ஆட்டு இறைச்சி சாப்பிட்டால், கொரோனா வைரஸ் பரவும்' என்றெல்லாம் சமூக வலைதளங்களில், வதந்திகள் பரப்பப்படுகின்றன.வாய்ப்புஇதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, எந்த மருந்தும் கண்டு பிடிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் பகிரப்படும், எவ்வித தகவலும், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவை.'மது அருந்தினால், கொரோனா பரவாது' என்ற, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

குடிமகன்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவரிடம் இருந்து, குறிப்பிட்ட காலத்திற்குள் தான், நோய் பரவும் என்றெல்லாம் வரையறை இல்லை. புகார்பாதிக்கப்பட்டவர், முழுமையாக குணம்அடையும் வரை, எந்த நேரத்திலும் மற்ற வர்களுக்கு வைரஸ் பரவும். எனவே, வெளியே செல்வதை, பெருமளவு தவிர்க்க வேண்டும்.'கூட்டமாக இருக்கும் பகுதிக்கு மக்கள் செல்லக்கூடாது' என்பது போன்ற அரசின் அறிவுரைகளை கேட்டு நடந்தால் போதும். வதந்திகளை பரப்பி, யாரும் மக்களை குழப்ப வேண்டாம்.

அவ்வாறு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, போலீசில் புகார் அளிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X