பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட்டில் 'கொரோனா' விழிப்புணர்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஊட்டி:ஊட்டி மார்க்கெட்டில், 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சோப்பு போட்டு கை கழுவும் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கொரோனா நோய் தொடர்பாக, உலகளாவிய பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு உத்தரவுப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் உத்தரவு படி, 'ஊட்டி, குன்னுார், கோத்தகிரி,கூடலுார், பந்தலுார் மற்றும் குந்தா ஆகிய தாலுகாக்களில், உள்ள அனைத்து மார்க்கெட் நுழைவாயில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளின் முன்பாக, நுகர்வோர் கைகளை கழுவும் வகையில் தண்ணீர், சோப்பு வைக்கப்படவேண்டும்.பொதுமக்கள் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு செல்லும் போது, கடையின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள சோப்பு கொண்டு கைகளை கழுவி நோய் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும்; வயதானவர்கள், குழந்தைகள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்,'என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, ஊட்டி மார்க்கெட்டில் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி, சுகாதார அலுவலர் முரளி சங்கர் ஆகியோர் தலைமையில், சோப்பு போட்டு கை கழுவும் பழக்கம் குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X