பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பாதித்தோருடன் தொடர்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட, இரண்டு வாலிபர்களிடம் தொடர்பில் இருந்த, 81 பேரை தனிமைப்படுத்தி, சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் முதல் நபராக, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட, 45 வயதான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர், சிகிச்சைக்கு பின் குணம்அடைந்தார். ஆனாலும், அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். உறுதிஅவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் நடந்த பரிசோதனையில், யாருக்கும் பாதிப்பு இல்லை என, தெரியவந்தது. அவர்கள் அனைவரும், ஓரிரு வார கண்காணிப்புக்கு பின், விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில், டில்லியில் இருந்து சென்னை வந்த, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 20 வயது வாலிபர். அயர்லாந்தில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த, 21 வயதான, எம்.பி.ஏ., மாணவர் ஆகியோருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இருவரும், சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில், கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதில், உ.பி., வாலிபருடன், சென்னையில் தங்கியிருந்த, ஏழு நண்பர்கள். குடியிருப்பில் பழகிய, 50 பேர் மற்றும் டில்லியில் இருந்து சென்னைக்கு, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் எஸ் - 5 பெட்டியில், அந்த வாலிபருடன் பயணித்த, 10 பேர் என, 67 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்; அவர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.14 பேர்இதேபோல, அயர்லாந்தில் இருந்து, சென்னை வந்த மாணவர், நண்பருடன், இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுஉள்ளார். இந்த மாணவருடன் தொடர்பில் இருந்த, 14 பேர், கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டு வாலிபர்களுடன், நேரடி தொடர்பில் இருந்த, 81 பேர், இதுவரை அடையாளம் காணப்பட்டு, சிறப்பு முகாம், வீடு, மருத்துவமனைகளில், கண்காணிப்பில் வைக்கப்பட்டுஉள்ளனர். 'மேலும், தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X