பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கின் போது உணவு ஏழைகளுக்கு வழங்க உத்தரவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : நாளை மக்கள் ஊரடங்கின் போது, ஏழை எளியவர்கள், கூலி தொழிலாளர்களுக்கு, உணவு மற்றும் தங்குமிட வசதி அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. சமூக கூடங்கள்வழக்கு தொடுத்தவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் கூறியதாவது:நடைபாதைகளில் வசிப்பவர்களை, பாதுகாக்க வேண்டும். நாளை, மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளதால், அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். வெள்ளப் பெருக்கின் போது, நடைபாதைகளில் வசித்தவர்களை, பள்ளிகள், சமூக கூடங்களில் தங்க வைத்தனர். தற்போதும், அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மாநகராட்சி சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் ராஜா சீனிவாஸ், ''சென்னையில், ௫௧ இரவு நேர தங்கும் இடங்கள் உள்ளன. நடைபாதைகளில் வசிப்பவர்கள், இந்த தங்கும் இடங்களை பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:வழக்கறிஞர் சுட்டிக்காட்டியபடி, மக்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ள இந்த நேரத்தில், கூலி தொழிலாளர்கள், ஏழை எளியவர்களின் நலன்களை கருத்தில் கொள்ள வேண்டும். இரவு தங்கும் இடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், அந்த வசதி இருப்பது, பலருக்கு தெரியாது.

ஓட்டல்கள்எனவே, தங்கும் வசதி இல்லாதவர்களுக்கு, இரவு தங்கும் இடங்கள் இருப்பது பற்றி, ஊடகங்கள் வாயிலாக, அரசும், மாநகராட்சியும் தெரிவிக்க வேண்டும். நாளை மக்கள் ஊரடங்கின் போது, ஓட்டல்கள், கடைகள் திறந்திருக்காது. அதனால், ஏழை எளிய மக்களுக்கு, உணவு வழங்க வேண்டிய கடமை, அரசுக்கும், மாநகராட்சிக்கும் உள்ளது.தேவைப்பட்டால், சமூக கூடங்கள், திருமண அரங்குகள், பள்ளிகளை, மக்கள் ஊரடங்கு தினத்தன்று பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X