சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடைபாதையில் கிடந்த மதுபாட்டில் அகற்றம்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 நடைபாதையில் கிடந்த மதுபாட்டில்  அகற்றம்

குன்னுார்:குன்னுார் கேஸ்பஜார் - தாலுகா அலுவலகம் செல்லும் நடைபாதையில் குவிந்திருந்த மதுபாட்டில்கள், அகற்றப்பட்டன.குன்னுார் கேஸ்பஜார் பகுதியில் இருந்து, தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் கோர்ட் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர, கேஸ்பஜார் பகுதியில் உள்ள, தனியார் கிளினிக்கை ஒட்டி நடைபாதை அமைந்துள்ளது.பிரதான சாலையில் செல்வதைவிட, இந்த நடைபாதையில் செல்பவர்களுக்கு காலதாமதம் குறையும் என்பதால், மக்கள் நடப்பாதையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நடைபாதையின் நடுவில், மது பாட்டில்கள் கொட்டப்பட்டிருந்த நிலையில் மக்கள் சென்றுவர சிக்கல் இருந்து வந்தது. மேலும், உடைந்த பாட்டில்களால், கால்பாதம் காயம் அடைய வாய்ப்பு இருந்தது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், நேற்று நடைபாதையில் கொட்டப்பட்டிருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X