சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.25 கோடி மதிப்பு தேன் தேக்கம்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான தேன் தேக்கம் அடைந்துள்ளதால்,உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்று, தேன் உற்பத்தி. மலையோர கிராமங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் தேன் சேகரிக்கப்படுகிறது. தேன் கொள்முதல் செய்வதற்காக, மார்த்தாண்டத்தில், தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு, 1 கிலோ தேன், 130 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த சங்கத்துக்கு நிர்வாக தேர்தல் நடைபெறாமல் தள்ளி போகிறது.இந்த சூழ்நிலையில், கொரோனா பீதியும் ஏற்பட்டுள்ளதால், தேன் கொள்முதல் செய்யப்படவில்லை. மூன்று மாதங்களில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான தேன் தேக்கம் அடைந்துள்ளது.

வெளி மார்க்கெட்டில், 1 கிலோ தேன் விற்பனை செய்தால், 70 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் திணறுகின்றனர்.'எனவே, சிறப்பு அதிகாரியை நியமித்து, தேக்கம் அடைந்துள்ள தேனை கொள்முதல் செய்ய வேண்டும்' என, உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Chennai,இந்தியா
21-மார்-202012:49:28 IST Report Abuse
R S BALA தரமான தேன் பல இடங்களில் கிடைப்பதில்லையே ... தகுந்த நடவடிக்கை மேற்கொண்டால் நமது உள்நாட்டிலேயே விற்பனையை அதிகப்படுத்தலாம் .
Rate this:
Cancel
Rathnavel aka Ramesh - chennai,இந்தியா
21-மார்-202010:20:37 IST Report Abuse
Rathnavel aka Ramesh தேனிற்கு expiry கிடையாதே? எப்படி நஷ்டமாகும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X