கொய்மலருக்கு விலை வீழ்ச்சி: சிறு விவசாயிகள் பாதிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

கோத்தகிரி:நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குறைந்த நிலையில், கொய்மலர் வாங்க ஆள் இல்லாத அளவுக்கு, விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரியில், தேயிலைக்கு மாற்று பயிராக, கொய்மலர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில், கூடுமான லாபம் கிடைத்து வந்த நிலையில், தற்போது விலை இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குன்னுார், கோத்த கிரி ஊட்டி பகுதியில், 145 விவசாயிகள், ஜெர்பரா, கார்னேசன் மற்றும் லில்லியம் உள்ளிட்ட, கொய் மலர்களை சாகுபடி செய்கின்றனர்.விலை வீழ்ச்சியால், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியாக, சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. இதனால், கொய்மலர் விற்பனை சரிந்து, கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு லில்லியம் மலருக்கு கடந்த மாதம், 24 ரூபாய் வரை விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது, பாதியாக குறைந்து, 12 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது.கார்னேசன், 8 ரூபாயில் இருந்து, ஒரு ரூபாயாக குறைந்துள்ளது. ஆறு ரூபாய்க்கு விற்கப்பட்ட ஜெர்பெரா வாங்க ஆள் இல்லாமல் தேங்கியுள்ளது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், கொய் மலர்களை பறிக்காமல் தோட்டங்களிலேயே விட்டுள்ளனர்.கோத்தகிரி கெராடா பகுதியை சேர்ந்த விவசாயி பெள்ளி கூறுகையில்,''கொரோனா காரணமாக, சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளன. பெரியளவில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதில்லை. கடந்த மாதம் வரை, உள்ளூரிலேயே, 300 'பன்ச்' விற்பனையான கொய்மலர், தற்போது, கொள்முதல் செய்ய ஆள் இல்லாமல், தேக்கமடைந்துள்ளன. இதனால், கொய்மலரை பறிக்காமல் விட்டுள்ளோம். விவ சாயிகளுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X