கைகளை கழுவுவது அவசியம்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கைகளை கழுவுவது அவசியம்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

Added : மார் 21, 2020
Share
பந்தலுார்:'கேரள மாநிலம் சென்று திரும்பும் பயணிகள், கை கழுவுவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும்,' என, அறிவுறுத்தப்பட்டது.பந்தலுார் அருகே, மாநில எல்லையான பிதர்காடு பகுதியில், 'என் சமூக நல பாதுகாப்பு இயக்கம்' சார்பில், நோய்களை தடுக்க, கை கழுவுதல் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இயக்க தலைவர் மைக்கேல் கூறுகையில், ''ஒவ்வொரு
 கைகளை கழுவுவது அவசியம்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

பந்தலுார்:'கேரள மாநிலம் சென்று திரும்பும் பயணிகள், கை கழுவுவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும்,' என, அறிவுறுத்தப்பட்டது.பந்தலுார் அருகே, மாநில எல்லையான பிதர்காடு பகுதியில், 'என் சமூக நல பாதுகாப்பு இயக்கம்' சார்பில், நோய்களை தடுக்க, கை கழுவுதல் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இயக்க தலைவர் மைக்கேல் கூறுகையில், ''ஒவ்வொரு மனிதனும் தன்னை தற்காத்து கொண்டு, தான்சார்ந்த சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், கேரள மாநிலம் சென்று திரும்பும் மக்கள், மாநில எல்லையிலுள்ள கை கழுவும் இடத்தில், கைகளை நன்றாக கழுவிய பின்னர், தமிழக எல்லைக்குள் வரவேண்டும்,'' என்றார். தொடர்ந்து, தண்ணீர் வசதி மற்றும் கை கழுவுவதற்கான பாத்திரங்கள், 'ேஹண்ட் வாஷ்' ஆகியவை வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர் உதயகுமாரி, சமூக ஆர்வலர்கள் ஞானசேகர், அர்ஜுனன் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X