பொது செய்தி

தமிழ்நாடு

மயானத்தில் செங்கல் சூளை அகற்ற அதிகாரிகள் உத்தரவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

பந்தலுார்:பிதர்காடு மற்றும் காமராஜ் நகர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில், காமராஜ் நகர் பகுதியில் இந்துக்கள் மயானம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த யோகநாதன் என்பவர் மயானத்தை ஆக்கிரமித்து, செங்கல் பிடித்து சூளை வைக்க ஏற்பாடு செய்து வந்தார். இதுகுறித்து பந்தலுார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.தொடர்ந்து தாசில்தார் மற்றும் வி .ஏ .ஓ., அசோக் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் கூறுகையில், 'பொது மயானத்தில் தனி நபர் யாரும் சொந்த பணிகள் செய்ய கூடாது; உடனடியாக செங்கல் சூளை அகற்றுவதுடன், செங்கற்களை அங்கிருந்து அகற்ற வேண்டும்,' உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X