பொது செய்தி

தமிழ்நாடு

பாலத்தை ஒட்டி ஆபத்தான மரம்; வெட்டும் பணி துவக்கம்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 பாலத்தை ஒட்டி ஆபத்தான மரம்; வெட்டும் பணி துவக்கம்

கூடலுார்:கூடலுார், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை புதிய பாலம் அருகே, ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணி துவங்கப்பட்டது.கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், மேல் கூடலுார் முதல் தெய்வமலை கிராமம், 27 மைல் வரை, இரண்டு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.ஆனால், பாலத்தை ஒட்டிய சாலையில், போக்குவரத்துக்கு பாதிப்பாக உள்ள மரங்களை அகற்றாததால், அப்பகுதியை கடந்து செல்ல, வாகன டிரைவர்கள் சிரமப்பட்டனர்.இந்நிலையில், அங்குள்ள ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கு, சமீபத்தில் மாவட்ட கமிட்டி அனுமதி வழங்கியது.தொடர்ந்து, சில்வர் கிளவுட் அருகே, மரங்களை வெட்டி அகற்றி, பாலம் மற்றும் அதனை ஒட்டிய சாலை சீரமைக்கும் பணி துவங்கியது.அதிகாரிகள் கூறுகையில்,'ஆபத்தான மரங்கள் வெட்டப்பட்டு பாலத்தை ஒட்டிய சாலை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு குறித்து, வனத்துறையின் அறிக்கை பெற்று ஏலம் விடப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X