பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகள் நிழற்குடை இருக்கை சீரமைக்க நடவடிக்கை தேவை

Added : மார் 21, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையின் இருக்கைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் சென்று வருகின்றன. மார்க்கெட் கமிட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மார்க்கெட் கமிட்டி, தனியார் வங்கி உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.இதனையொட்டி பொதுமக்களின் வருகை அதிகளவில் இருந்து வருகிறது. கச்சிராயபாளையம் மார்க்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, இருக்கைகளுடன் கூடிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் பலர் இருக்கையில் அமர்ந்து பயனடைந்து வந்தனர்.இந்நிலையில் தற்போது நிழற்குடையில் உள்ள இருக்கைகள் அனைத்தும் முற்றிலுமாக உடைந்து சேதமாகியுள்ளன.இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பயணியர் நிழற்குடையின் இருக்கைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X