பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டல் உரிமையாளர்கள் கலக்கம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் உள்ள அசைவ ஓட்டல்களில் சாப்பிட வருவோரின் எண்ணிக்கை குறைந்ததால் ஓட்டல் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப்பகுதியாக உளுந்துார்பேட்டை பகுதி உள்ளது. இதனால் உளுந்துார் பேட்டை டோல்கேட் பகுதி வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.இவ்வழியே செல்லும் வாகனங்களால் டோல்கேட் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் அதிகரித்துள்ளன. விடுமுறை நாட்கள் என்றால் ஓட்டல்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது.தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதிகளில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளதோடு ஓட்டல்களில் சாப்பிட பலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.அதிலும் அசைவ ஓட்டல்களில் சாப்பிட வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்ததால் அசைவ ஓட்டல்கள் வெறிச்சோடி கிடக்கிறது. சைவ ஓட்டல்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே சாப்பிட வருகின்றனர். இதனால், ஓட்டல் உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.ஓட்டல்களில் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஊழியர்களை விடுமுறை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இன்னும் ஒரு சில ஓட்டல்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X