பொது செய்தி

தமிழ்நாடு

வாழை மரத்துடன் 5 வகையான ஊடுபயிர் இயற்கை விவசாயத்தில் விவசாயி ஆர்வம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலத்தில் விவசாயி ஒருவர் வாழை மரத்துடன் 5 வகையான ஊடு பயிர்களை வளர்த்து அறுவடை செய்து லாபம் ஈட்டி வருகிறார்.

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. விவசாயி. இவர் தன்னுடைய விளைநிலத்தில் வாழை மரங்களை நட்டு அதனுடன் ஊடுபயிராக காய்கறி, கீரை உட்பட 5 வகையான செடிகளை பயிரிட்டுள்ளார். செடிகளில் விளையும் காய்கறிகளை அறுவடை செய்து கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் விற்று லாபம் ஈட்டி வருகிறார்.இது குறித்து சுப்ரமணி கூறியதாவது:நான் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்களை நட்டு பராமரிக்கிறேன். 12 மாதங்கள் வளரக்கூடிய இந்த சிசுவாழை மரத்தின் இலை, வாழைப்பூ, காய், தண்டு ஆகியவற்றை தனி தனியாக விற்று வந்தோம்.இந்நிலையில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் வாமலை, ரகுநாதன் ஆகியோர் அறிவுரையின் பேரில் தர்பூசணி, அவரைக்காய், பச்சை மிளகாய், சிறுகீரை, கத்தரி உள்ளிட்ட 5 வகையான செடிகள், விதைகளை மானியத்தில் வாங்கி ஊடு பயிராக விளைவித்துள்ளேன்.தர்பூசணி 90 நாட்களிலும், பச்சை மிளகாய், கத்தரி ஆகியவை 6 மாதங்களிலும், சிறுகீரை 3 நாட்களிலும், அவரை 4 மாதங்களிலும் விளைச்சலை தருகிறது. இவை அனைத்தையும் அறுவடை செய்து கள்ளக்குறிச்சி உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறேன்.மேலும் பயிர்களில் ரசாயன உரங்கள் தெளிக்காமல் தனது வீட்டின் அருகில் அமைத்துள்ள கோழிப்பண்ணையில் இருந்து கிடைக்கும் கழிவுகளை சேர்த்து வைத்து 15 நாளுக்கு ஒரு முறை உரமாக தெளிக்கிறேன். இதனால் ரசாயன உரங்களில் செலவு பெருமளவு குறைகிறது.இயற்கை முறையில் விளைவிப்பதால் எங்களிடம் காய்கறி மற்றும் கீரைகளை வாங்குபவர்கள் அவற்றின் தரம் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர். இந்த செடிகளை பராமரிப்பது மிக கடினமாக இருந்தாலும், அதை நன்றாக கவனித்து தக்க பருவத்தில் அறுவடை செய்வதினால் லாபம் கிடைக்கிறது.இதுமட்டுமின்றி குளிர் பிரதேச பகுதிகளில் வளரக்கூடிய முட்டைக்கோசினை சோதனைக்காக வளர்த்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X