அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் கொலையாளிகள் விடுதலை: அரசுக்கு கவர்னர் செயலர் கடிதம்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : ''ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக, பல்வேறு விசாரணை அமைப்புகள் அடங்கிய குழு, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பின், முடிவு எடுக்கப்படும் என, தமிழக கவர்னரின் செயலர் கடிதம் எழுதியுள்ளார்,'' என, சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:கொங்கு இளைஞர் பேரவை -- தனியரசு: முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் உள்ள, ஏழு பேரை விடுவிக்க வேண்டும். அவர்கள், பரோலில் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.அமைச்சர் சண்முகம்: அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே, எங்கள் விருப்பம். இந்த வழக்கில், கவர்னர் முடிவெடுக்கலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து உடனடியாக, ஏழு பேரையும் விடுவிக்கக் கோரி, கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், கவர்னரிடத்தில் இருந்து, எந்த பதிலும் வரவில்லை.இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு அளித்த பரிந்துரை மீதான, நிலை என்ன என்பதை தெரிவிக்க, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, கவர்னரின் செயலருக்கு, குற்றவாளிகள் விடுவிப்பு தொடர்பான பரிந்துரை கடிதத்தின் நிலை குறித்து, தமிழக உள்துறை அமைச்சர் கடிதம் எழுதினார். அதற்கு பதில் கடிதம், கவர்னரின் செயலரிடம் இருந்து வந்தது.அதில், 'ராஜிவ் கொலை வழக்கின், சதித் திட்டம் தொடர்பாக ஆராய, சி.பி.ஐ., - ஐ.பி., உட்பட பல்வேறு விசாரணை முகமைகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்த குழுவின் விசாரணை இன்னும் முடியவில்லை.'அந்தக் குழு, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பின், பரிந்துரை கடிதத்தின் மீது, முடிவு எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
21-மார்-202018:12:35 IST Report Abuse
s.rajagopalan ராஜிவ் மட்டுமா கொலையுண்டார் ? இருபது பேருக்கு மேல் இறந்தனர். அவர்க எல்லோரும் இந்த கொலைகாரக்கும்பலை மன்னிக்கவேண்டும். அது நடந்தால் விடுதலை பற்றி சிந்திக்கலாம். சோனியாவும் பிரியங்கா மட்டும் மன்னாத்தான் போறாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X